ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் நடைபயணம்
ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் நடைபயணம்
ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபயண ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் தொடங்கியது. நடைபயணத்துக்கு கட்டிட சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். பின்னர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வரை நடைபயணமாக சென்றனர். அதன்பிறகு கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். அனைவருக்கும் வீடு உள்ளிட்ட கட்டிட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், கட்டிட சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மூர்த்தி, பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் முருகேசன், துணை செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். அதில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 60 வயது நிறைவடைந்த பதிவு பெற்ற அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைத்து நிர்ணயிக்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தது. கோரிக்கை மனுவை தமிழக முதல் அமைச்சருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினார்கள்.
Related Tags :
Next Story