குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
குளச்சல்:
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மீன்பிடி துறைமுகத்தில் கலெக்டர் ஆய்வு
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர், துறைமுக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் பதனப்படுத்தும் அறையினையும் பார்வையிட்டு இதை உடனடியாக மீன்பிடி துறைமுக பயனீட்டாளர்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
விழிப்புணா்வு கூட்டம்
அதைத்தொடர்ந்து குளச்சல் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்க உறுப்பினர்கள், குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு "ஒரு மாவட்டம் ஒரு பொருள்" திட்டம் தொடர்பான மீன் பதப்படுத்தும் பொருட்கள் தயாரிப்பது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு பயனீட்டாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், மீன்பிடித்துறைமுக செயற்பொறியாளர், துறைமுக மேலாண்மை சங்க உறுப்பினர்கள், மீனவர் கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் மகளிர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story