தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 4 April 2022 11:39 PM IST (Updated: 4 April 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் அருகே நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நகைக்கடன்
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு உட்பட்டு பெறப்பட்டிருக்கும் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. 
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே உள்ள சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாராபுரம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மணி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பணியிடை நீக்கம்
சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2021-ம் ஆண்டு மார்ச் 31-ல் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் தள்ளுபடியான விவசாய நகைக்கடன் குறித்த உண்மை நிலையை கண்டறிய குடிமங்கலம் கூட்டுறவு சார்பதிவாளர் ஆனந்த குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்து துணைப்பதிவாளர் உத்தரவிட்டார். 
இந்த நிலையில் கூட்டுறவுத் துறையின் ஆணைகளை பின்பற்றாமல் தனது கடமை மற்றும் பொறுப்புகளிலிருந்து தவறியமைக்காகவும் புகார் தொடர்பாகவும் சிந்திலுப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் தண்டபாணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் பொதுப்பணி நிலை திறன் அதிகாரம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் உத்தரவிட்டார்.

Next Story