பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடகம் வருகை; வருகிற 16-ந் தேதி நடக்கும் செயற்குழுவில் பங்கேற்பு
வருகிற 16-ந் தேதி நடக்கும் செயற்குழுவில் பங்கேற்க பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடகத்திற்கு வருகை தர உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பா.ஜனதா தேசிய தலைவர்கள் கர்நாடகத்தின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்ப தொடங்கியுள்ளனர். உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த 1-ந் தேதி பெங்களூருவில் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பா.ஜனதாவின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்படியும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திவிட்டு சென்றார். இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா செயற்குழு கூட்டம் வருகிற 16-ந் தேதி விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடகம் வருகிறார். அவர் 16 மற்றும் 17-ந் தேதி ஆகிய 2 நாட்கள் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
Related Tags :
Next Story