ஏரியூர் அருகே வேடமாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்


ஏரியூர் அருகே வேடமாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 2 April 2022 10:02 PM IST (Updated: 2 April 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே வேடமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஏரியூர்:
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பழையூரில் உள்ள வேடமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் அக்னி கரகம், பூங்கரகம், சக்தி கரகம், எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்தும், அலகுக்குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story