தஞ்சை அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 38 பேர் காயம்


தஞ்சை அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 38 பேர் காயம்
x
தினத்தந்தி 1 April 2022 12:51 AM IST (Updated: 1 April 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடு மாட்டியதில் 38 பேர் காயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்:-

தஞ்சை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் மாடு மாட்டியதில் 38 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

தஞ்சையை அடுத்துள்ளராமநாதபுரம் ஊராட்சி திரவுபதை அம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு விழா நேற்று நடைபெற்றது. இதை தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்பதற்காக தஞ்சை, வல்லம், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து 758 காளைகள் பதிவு செய்யப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தஞ்சை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் பரிசோதனைக்குப் பிறகு அனுமதித்தனர். தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளைப் பிடிப்பதற்காக 350 வீரர்கள் பதிவு செய்திருந்து களமிறங்கி காளைகளை பிடித்தனர். வீரர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்டனர்.

வீரர்களுக்கு பரிசு

மாடுகளை பிடித்த வீரர்களுக்கு வாஷிங்மெசின், சைக்கிள், எவர்சில்வர் பொருட்கள், கட்டில், பீரோ போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றிப் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் மாடு முட்டியதில் 38-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உடன் அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திரவுபதையம்மன் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கிராம நாட்டாண்மைக்காரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற்றதையொட்டி வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story