எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 3 மாடி கட்டிடம் ஏறி ‘பிட்’ வழங்கிய வாலிபர்கள்
தேர்வு எழுதிய மாணவர்கள் பிட் அடிக்க உதவி சம்பவம் விஜயாப்புராவில் நடந்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கி நடந்தது. இந்த தேர்வின் போது மாணவ, மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். விஜயப்புரா (மாவட்டம்) டவுன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியிலும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளியின் 3-வது மாடியில் அமர்ந்து மாணவர்கள் தோ்வு எழுதினார்கள். இந்த நிலையில், பள்ளியையொட்டியே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் வழியாக சில வாலிபர்கள் 3-வது மாடிக்கு சென்றார்கள்.
அதாவது தேர்வு எழுதும் மாணவர்கள் காப்பி அடிக்க, அவர்களுக்கு தேவையான வினா விடை சம்பந்தப்பட்ட ‘பிட்’ பேப்பர்களை கொண்டு சென்றனர். தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த வாலிபர்கள் 3-வது மாடிக்கு சென்று மாணவர்களுக்கு உதவினார்கள். இதுபற்றி அறிந்ததும் பள்ளி ஊழியர்கள் வந்தனர். உடனே வாலிபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். மாணவர்களுக்கு உதவுவதற்காக வாலிபர்கள் 3-வது மாடிக்கு ஏறும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story