பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிார்பார்க்கின்றனர்.
பேராவூரணி:
வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிார்பார்க்கின்றனர்.
தீயணைப்பு நிலையம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கடந்த 1986-ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டது. இதையடுத்து சேதுசாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வரை தீயணைப்பு நிலையம் இயங்கி வந்தது.
தற்போது ஆவணம் சாலையில் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக்கோட்டை சாலையில் அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படாமல் உள்ளது.
புதிய கட்டிடம் வேண்டும்
எனவே வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பேராவூரணி தீயணைப்பு-மீட்பு பணிகள் நிலையத்திற்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். அதேபோல் தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு பணியாளர் குடியிருப்பு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story