விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம்


விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம்
x
தினத்தந்தி 12 March 2022 1:49 AM IST (Updated: 12 March 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம் நடக்கிறது

விராலிமலை
விராலிமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும், இத்தலமானது அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்திகளை வழங்கி திருபுகழ் பாட வைத்த தலமாகவும், நாரதருக்கு பாவவிமோசனம் வழங்கிய தலமாகவும் விளங்கி வருகிறது. இதேபோல பல்வேறு சிறப்புகள்பெற்ற இக்கோவிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து ஒரு ஆண்டு ஆனதால் திங்கட்கிழமை வருடாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனையடுத்து ஞாயிற்றுகிழமை முதல்கால யாகபூஜை நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை 9 மணிக்கு 2-ம் கால யாகபூஜை தொடங்கி மலைமேல் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மதியம், மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு நாதஸ்வரம், தவில் மற்றும் மங்கள இசையுடன் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை திருவீதி உலா நடைபெறுகிறது.

Next Story