பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் துப்புரவு பணி செய்த ஓய்வுபெற்ற மூதாட்டிக்கு பாராட்டு விழா


பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் துப்புரவு பணி செய்த ஓய்வுபெற்ற மூதாட்டிக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 10 March 2022 7:30 PM IST (Updated: 10 March 2022 7:30 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் துப்புரவு பணி செய்தவர் ஓய்வுபெற்ற மூதாட்டிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பூந்தமல்லியை சேர்ந்தவர் கலைவாணி (வயது 60). இவர் கடந்த 32 ஆண்டுகளாக பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் துப்புரவு பணி செய்து வந்தார். பூந்தமல்லி போலீஸ் நிலைய வளாகத்தை தினமும் சுத்தம் செய்வது, போலீசாருக்கு வேண்டிய பணிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் மூதாட்டி கலைவாணி, உலக பெண்கள் தினமான நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அவரது பணியை சிறப்பிக்கும் விதமாக பூந்தமல்லி போலீசார் மூதாட்டிக்கு திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள். அப்போது கலைவாணிக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் கொடுத்ததுடன், போலீசார் ஓய்வுபெற்றால் அவர்களை போலீஸ் வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதேபோல் போலீஸ் நிலையத்தில் துப்புரவு பணி செய்து ஓய்வுபெற்ற மூதாட்டியையும் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தனது போலீஸ் வாகனத்திலேயே அவரது வீட்டுக்கு வழியனுப்பி வைத்தார்.

இதுபற்றி மூதாட்டி கலைவாணி கூறும்போது, “எனது கணவர் ராமகிருஷ்ணன் விவசாயி. மகன் வீரராகவன், மகள் பச்சையம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தேன். கணவர், மகன், மகள் 3 பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். 1991-ல் 170 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். அதன்பிறகு ரூ.900 ஆக சம்பள உயர்வு பெற்று தற்போது ரூ.7 ஆயிரம் வரை வாங்கி வந்தேன்” என்றார்.


Next Story