கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி
கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் ஆகியவை உள்ளன.
இந்த பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பூங்காவில் சுற்றுச்சுவர் இல்லாததால் காட்டெருமைகள் உள்ளே புகுந்து பல இடங்களை சேதப்படுத்தியது.
எனவே பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பூங்காவை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பூங்காவில் வரும் கோடை சீசனுக்குள் தயாராகும் வகையில் 35 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிக்காக மலர் பாத்திகளில் மண்ணை இயற்கை உரத்துடன் கலந்து பதப்படுத்தி தயார் செய்யும் பணியும், புல் தரைகளில் கூடுதலாக வளர்ந்துள்ள புற்களை வெட்டி சமப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
Related Tags :
Next Story