ஆரியூர் அழகிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
அழகிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள ஆரியூரில் பூமி நீளா சமேத அழகிய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தது. இதைதொடர்ந்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூைஜகள் நடைபெற்றது. தொடர்ந்து விசேஷ சாந்தி, யாகசாலை பிரவேசம், பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு புனிதநீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் பூமி நீளா சமேத அழகிய பெருமாள் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் ஆரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story