திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சந்திரசேகரர் கேடக உற்சவம்


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சந்திரசேகரர் கேடக உற்சவம்
x
தினத்தந்தி 7 March 2022 7:45 PM IST (Updated: 7 March 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சந்திரசேகரர் கேடக உற்சவ சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர், மார்ச்.8-
பங்குனி உத்திர விழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சந்திரசேகரர் கேடக உற்சவ சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
தியாகராஜர் கோவில் 
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது.  
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றில் முதன்மையானதாகவும், சைவ சமயத்தின் முதன்மை பீடமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில் பன்னிருதிரு முறைகளாலும் பாடல் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையை பெற்றது. இந்த கோவில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.  
சந்திரசேகரர் கேடக உற்சவம் 
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி நாள்தோறும் உற்சவங்கள், சாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது. அதன்படி சந்திரசேகரர் கேடக உற்சவம் 2-வது நாளாக நடந்தது. விழாவையொட்டி தியாகராஜரின் பிரதிநிதியான சந்திரசேகரருக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கேடக உற்சவம் நடந்தது. தொடர்ந்து சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 



Next Story