பள்ளி குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த முதல்அமைச்சர் மு க ஸ்டாலின்
தூத்துக்குடி அருகே வரவேற்க வந்த பள்ளி குழந்தைகளை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் கொஞ்சி மகிழ்ந்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக் நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று(திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் சென்றார். அப்போது, நுழைவுவாயிலில் வரவேற்புக்காக நின்ற 2 சிறுமிகளை பார்த்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரைவிட்டு இறங்கினார். பின்னர் அந்த சிறுமிகளிடம், இன்று பள்ளிக்கு செல்லவில்லையா? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமிகள், முதல்-அமைச்சரை பார்ப்பதற்காக பள்ளிக்கு இன்று லீவு எடுத்து இருப்பதாக கூறினர். இதைக்கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்துக்கொண்டே, நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி விட்டு விழா நடைபெறும் இடத்துக்கு சென்றார்.
இதேபோல் பிரையண்ட் நகரில் மழைவெள்ள பாதிப்பு பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை பார்வையிட வந்தபோது பள்ளி குழந்தைகள் நின்று கொண்டிருந்தனர். அந்த குழந்தைகளின் அருகில் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கொஞ்சி பேசி மகிழ்ந்தார்.
Related Tags :
Next Story