ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜை


ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 March 2022 12:09 AM IST (Updated: 6 March 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அரிமளம்:
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் சிவபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மிருத்திகா பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ராகவேந்திர சுவாமிகளின் 401-வது பட்டாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ராகவேந்திர சுவாமிக்கு மஞ்சள், பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மங்கள ஆரத்தி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். வருகிற 9-ந் தேதி ராகவேந்திர சுவாமிகளின் அவதார திருநாள்  கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது.

Next Story