3 பேரை முட்டி காயப்படுத்திய மாடு இறந்ததால் பரபரப்பு


3 பேரை முட்டி காயப்படுத்திய மாடு இறந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Feb 2022 1:35 AM IST (Updated: 22 Feb 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் 3 பேரை முட்டி காயப்படு்த்திய மாடு சில மணி நேரத்தில் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கும்பகோணம்:
கும்பகோணத்தில் 3 பேரை முட்டி காயப்படு்த்திய மாடு சில மணி நேரத்தில் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும், சாலையில் சுற்றித்திரிய விடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு தரப்பினர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோ சாலைகளில் அடைத்து வருகின்றனர். 
ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி 
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையம் அருகே பாரதி நகர் சாலையில் சென்று கொண்டிருந்த 3 பேரை ஒரு மாடு விரட்டி விரட்டி முட்டியது. இதில் கும்பகோணம் சிங்காரம் செட்டித்தெரு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் படுகாயம் ஏற்பட்டது. மேலும் 2 பேர் காயங்களுடன் தப்பினர். படுகாயமடைந்த சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீசார் மற்றும் கும்பகோணம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரை முட்டிய மாட்டை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர்.
மாடு இறந்ததால் பரபரப்பு
பின்னர் அந்த மாட்டை கும்பகோணம் போலீஸ் நிலையம் அருகே கட்டிபோட்டனர். நேற்று அதிகாலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்டி போட்டிருந்த மாடு உயிரிழந்தது. இறந்த மாட்டின் உடல் பிரேத பரிசோதனைக்காக  கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு    அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story