பெண் மர்மச்சாவு


பெண் மர்மச்சாவு
x
தினத்தந்தி 12 Feb 2022 11:41 PM IST (Updated: 12 Feb 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவர், ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி நந்தினி (26).

இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நந்தினி நேற்று வீட்டின் ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். 

இதுகுறித்து குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து நந்தினியின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் அவரின் உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.

 மர்மச்சாவாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தினி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story