சிட்லபாக்கம் ஏரிக்கரை பகுதியில் பட்டா நிலங்களை அளவீடு செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
சிட்லபாக்கம் ஏரிக்கரை பகுதியில் பட்டா நிலங்்களை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு
சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஏரியை ஆக்கிரமித்து கட்டி உள்ள 450 வீடுகளை அகற்றுவதற்காக வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள பெரியார் தெருவில் பட்டா நிலங்களையும் ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயலுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த பகுதிகளையும் அளவீடு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பு
அதன்படி தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து சிட்லப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் அளவீடு செய்யும் பணியை நேற்று காலை தொடங்கினர். பாதுகாப்புக்காக அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆனால் பட்டா நிலங்களை அளக்க கூடாது என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களிடமுள்ள பத்திரங்களை, பட்டா விவரங்களை கேட்ட பிறகே அளக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வருவாய்த் துறையினர் தொடர்ந்து அளவீடு செய்ததால்தான் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
அங்கிருந்த தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், “அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எச்சரிக்கை செய்தார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ெதாடர்ந்து அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
ஒருதலைப்பட்சமாக அளவீடுகள் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் கிராம நத்தம் மற்றும் ஏரி ஆக்கிரமிப்புகள் மட்டுமே அளவீடு செய்யப்படுவதாக தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தெரிவித்தார்.
Related Tags :
Next Story