வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அரசு பள்ளியில் இல்லம் தேடி நூலகம் திட்டம்
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அரசு பள்ளியில் இல்லம் தேடி நூலகம் திட்டம்
பொள்ளாச்சி
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் வாசிப்பு பழக்கம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பெத்தநாயக்கனூர் அரசு பள்ளி மூலம் இல்லம் தேடி நூலகம் திட்டத்தை தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
புத்தகங்களை தமிழாசிரியர் பாலமுருகன் மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று புத்தகங்களை வழங்கி வருகின்றார். இதுகுறித்து பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் என்பவர் கூறியதாவது:-
பெத்தநாயக்கனூர் பள்ளியில் 162 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி நூலகத்தில் 1,900 புத்தகங்கள் உள்ளன. பள்ளி திறந்து இருந்தபோது மாணவ-மாணவிகள் நூலகத்திற்கு சென்று ஆர்வமுடன் புத்தகங்களை படித்து வந்தனர். இதன் மூலம் அவர்களது வாசிப்பு திறன் அதிகமானது.
தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு வர இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் வீட்டிற்கு சென்று வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்கள் நேரடியாக கொடுக்கப்படுகின்றன.
பின்னர் 10 நாட்களுக்கு பிறகு நேரடியாக சென்று ஏற்கனவே வழங்கப்பட்ட புத்தகத்தை பெற்றுக் கொண்டு மீண்டும் வேறு புத்தகம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story