குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி புறக்கணிப்பு: மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி புறக்கணிப்பு:  மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2022 11:03 PM IST (Updated: 18 Jan 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீரமங்கலம்:
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அலங்கார ஊர்திகள் கலந்து கொள்ளும். அதே போல இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து சுதந்திர போராட்ட வீரர்களுடன் கூடிய ஊர்தியை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அந்த ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story