தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு


தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு
x
தினத்தந்தி 18 Jan 2022 8:33 PM IST (Updated: 18 Jan 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மீண்டும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது

தூத்துக்குடி:
தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயலில் மீண்டும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்
தூத்துக்குடியில் இருந்து சென்னை, மைசூர், கோவை, நெல்லைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக ரெயில்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. பின்னர் படிப்படியாக ரெயில்கள் மீண்டும் இயங்க தொடங்கின. அதன்படி தூத்துக்குடியில் இருந்து சென்னை, மைசூர் மற்றும் நெல்லைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும், முன்பதிவு ரெயில்பெட்டிகளாக இருந்தன. இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டு உள்ளன. 
நாளைமறுநாள் முதல்...
அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டிகளாக இயக்கப்பட்டு வரும் 2 இரண்டாம் வகுப்பு பொது, சரக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story