அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி விழா
மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அனுமன் ஜெயந்தி விழா தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், உபகார பூஜைகளும் நடந்தது.
தர்மபுரி எஸ்.வி. ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை வழிபாடு நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர்
இதேபோல் தர்மபுரி ஹரிஹர நாத சாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் அல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முக கவசத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். விழாவையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
10,008 வடமாலை
இதேபோல் தொப்பூர் கணவாயில் உள்ள மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையுடன் 10,008 வடமாலை சாத்தப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குப்புசெட்டிபட்டி வீரஆஞ்சநேயர் கோவில், சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், மொடக்கேரி வீர ஆஞ்சநேயர் கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
காரிமங்கலம்
காரிமங்கலத்தில் பாலக்கோடு ரோட்டில் உள்ள ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், காட்டுசீகலஅள்ளி ஆஞ்சநேயர் கோவில், அருணேசுவரர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், மலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உள்பட காரிமங்கலம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜை மற்றும் வடைமாலை சார்த்தல், வெண்ணை காப்பு சாத்துதல் போன்றவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story