புத்தாண்டையொட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு


புத்தாண்டையொட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2021 9:33 PM IST (Updated: 31 Dec 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டையொட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி

புத்தாண்டையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் தங்கும் விடுதிகள் புத்தாண்டையொட்டி அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் மேற்பார்வையில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் சேத்துமடை, ஆழியாறு சோதனைச்சாவடிகளில் வைத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பட்டாசு வெடிக்க கூடாது

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. டாப்சிலிப்பிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்வதை தடுக்க சேத்துமடை சோதனைச்சாவடியில் முதலில் வரும் 150 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

 இதைதவிர மற்ற வாகனங்களை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் மதுபாட்டில்களை கொண்டு செல்வதை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதைப்போன்று ஆழியாறு சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் சத்தம் போடுவது, பட்டாசு வெடிப்பது, கூட்டம் கூடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது விதிமுறைகளை மீறி சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சுற்றுலா பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story