அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை


அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
x
தினத்தந்தி 27 Dec 2021 1:14 AM IST (Updated: 27 Dec 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.

களக்காடு:
களக்காடு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் சிறுவர், சிறுமிகளுக்கு அய்யப்ப மாலை அணிவிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மாலை அணிந்த சிறுவர்களுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 2-ம் நாளான நேற்று மாலை அணிந்த அய்யப்ப பக்தர்களின் ஊர்வலம் நடந்தது. இரு முடி கட்டிய பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பனின் தங்க அங்கி எடுத்து வரப்பட்டது. அதனைதொடர்ந்து கோவில்பத்து ஆற்றங்கரை பள்ளி வாசல் அருகில் பக்தர்களின் பேட்டை துள்ளல், அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், அன்னதானம், திருவிளக்கு பூஜை, இரவில் 18-ம் படி பூஜை புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அய்யப்பன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story