நெற்பயிரில் நெல்பழ நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
நெற்பயிரில் நெல்பழ நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண் விஞ்ஞானி விளக்கம் அளித்தார்.
நீடாமங்கலம்:
நெற்பயிரில் நெல்பழ நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண் விஞ்ஞானி விளக்கம் அளித்தார்.
நெல்பழ நோய்
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல்லை தாக்க கூடிய நெல்பழ நோய் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்து உள்ளது. இந்த நோயானது விதை, காற்று, மண் மற்றும் நீர் மூலம் பரவக்கூடியது. பூஞ்சாண வித்துக்கள் ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு எளிதாக பரவிவிடும். இதற்கு சாதகமான சூழ்நிலைகள் காற்றின் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கு மேல் இருப்பது, குறைந்த வெப்பநிலை, இரவு நேர பனிப்பொழிவு போன்ற சூழ்நிலைகள் இந்த நோய் வருவதற்கு ஏதுவாக இருக்கும்.
பூக்கும் பருவத்தில் இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். தாக்கப்பட்ட கதிர்கள் முதலில் பச்சை நிற பூஞ்சாணத்தினால் மூடப்பட்டு நாளடைவில் இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டர் வரை பூஞ்சாணம் வளர்ந்து மஞ்சள் நிறமாக மாறி, பிறகு உடைந்து காற்றின் மூலம் பரவி அடுத்த நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தரமான விதையை ேதர்வு செய்ய வேண்டும்
தாக்கப்பட்ட நெல் மணிகளின் தரம் குறைவதோடு மட்டுமல்லாமல் மணிகள் பதராகிவிடும். இதனால் மலட்டுத்தன்மை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
நெல் மணிகளில் உள்ள புரதச்சத்தினை உட்கொண்டு இந்த பூஞ்சாணம் வளர்ந்து பருமனாக தென்படும்.
எனவே விவசாயிகள் அளவுக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிர்த்து பரிந்துரைக்கப்பட்ட அளவையே உபயோகப்படுத்த வேண்டும். விதையை தேர்வு செய்யும்போது தரமான விதையை தேர்வு செய்ய வேண்டும். புரப்பிகோனசோல் 25 இசி என்ற பூஞ்சாண கொல்லியை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 77 டபள்யூ.பி 500 கிராம் பூஞ்சாண கொல்லியை கதிர்தாள் உருவாகும் பருவம் ஒரு முறையும், 50 சத பூக்கள் உருவாகும் தருணத்தில் ஒரு முறையும் தெளித்தால் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story