தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார்கோவில் கள்ளர்வெட்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை


தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார்கோவில் கள்ளர்வெட்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
x
தினத்தந்தி 15 Dec 2021 5:33 PM IST (Updated: 15 Dec 2021 5:33 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவில் இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறி உள்ளார்

தூத்துக்குடி:
திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவில் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கள்ளர் வெட்டு திருவிழா
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘கள்ளர்வெட்டு திருவிழா” நடந்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை) கள்ளர் வெட்டு நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) விழா நிறைவு நாள் நிகழ்ச்சியும் நடக்கிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா (ஒமைக்ரான்) வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 31-ந் தேதி வரை தமிழக அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அனுமதி இல்லை
ஆகையால் கள்ளர் வெட்டு திருவிழாவின் முக்கிய நாட்களான இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) 2 நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் யாரும் கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு வருவதற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே திருவிழாவை காண இன்றும், நாளையும் பக்தர்கள் வர வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story