கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த கும்பகோணம் மாணவி பெற்றோரிடம் ஒப்படைப்பு


கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த கும்பகோணம் மாணவி பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 14 Dec 2021 2:20 PM IST (Updated: 14 Dec 2021 2:20 PM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த கும்பகோணம் மாணவி பெற்றோரிடம் ஒப்படைத்து கும்பகோணத்துக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 16 வயது சிறுமி, கையில் துணி பையுடன் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தாள். இதனால் சந்தேகம் அடைந்த கோயம்பேடு போலீசார், சிறுமியிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அந்த சிறுமி, கும்பகோணத்தை சேர்ந்தவள் என்பதும், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருவதும் தெரிந்தது. தனது தாயார் திட்டியதால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய மாணவி, கும்பகோணத்தில் இருந்து பஸ்சில் சென்னை கோயம்பேடு வந்ததும், அதன்பிறகு எங்கு செல்வது? என தெரியாமல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கோயம்பேடு வரவழைத்த போலீசார், மாணவிக்கு அறிவுரைகூறி பெற்றோரிடம் ஒப்படைத்து கும்பகோணத்துக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story