பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர்
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
வத்திராயிருப்பு,
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
பெரியாறு அணை
வத்திராயிருப்பு தாலுகா பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி, விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர். அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் கோரிக்கைைய ஏற்று பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பருவமழை
அதன்பேரில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 கண்மாய்கள் மற்றும் நேரடி பாசனம் மூலமாக 8,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதிகள் பெறும். மேலும் வடகிழக்கு பருவமழை தொடரும் பட்சத்தில் அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து பருவகாலம் வரை இத்திட்டங்களின் கீழ் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதேபோல் அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு பாசன பருவகாலம் வரை தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்படும். எனவே விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற வேண்டும்.
பெரியாறு அணையில் உள்ள பூங்கா முழுவதையும் சீரமைத்து புதிதாக பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீனவர் தினம்
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ராஜா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் எஸ்.நாராயணன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் சிந்துமுருகன், ஆறுமுகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, உதவி பொறியாளர்கள், தாசில்தார்கள், ஒன்றிய செயலாளர் முனியாண்டி, நகர செயலாளர் முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட மீனவர் சங்க பயனாளிகளுக்கு மீன் குஞ்சுகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
Related Tags :
Next Story