சென்னையில் பெண் போலீஸ் பலி எதிரொலி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு நின்ற பழமையான மரம் அகற்றம்


சென்னையில் பெண் போலீஸ் பலி எதிரொலி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு நின்ற பழமையான மரம் அகற்றம்
x
தினத்தந்தி 13 Nov 2021 5:34 PM IST (Updated: 13 Nov 2021 5:35 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெண் போலீஸ் பலி எதிரொலியால் நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு நின்ற பழமையான மரம் அகற்றப்பட்டது.

நிலக்கோட்டை:
சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த பெண் போலீஸ் ஒருவர் மரம் சாய்ந்து விழுந்து பலியானார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்புள்ள பழமையான, முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு நின்ற மிகவும் பழமையான சீமைக்கருவேல மரத்தை அகற்றும் பணி நடந்தது. இதை சார்பதிவாளர் குணசேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆபத்தான வகையில் இருந்த சீமைக்கருவேல மரம் அகற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story