சென்னிமலை அருகே 3 மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி


சென்னிமலை அருகே 3 மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 27 Oct 2021 3:32 AM IST (Updated: 27 Oct 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே 3 மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 சென்னிமலை
சென்னிமலை அருகே 3 மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தடுப்பணை நிரம்பியது
சென்னிமலை புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர் பகுதியில் முதலைமடை பாலம் அருகில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதுப்பாளையம், எல்லைக்கிராமம் மற்றும் எக்கட்டாம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி தடுப்பணை கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
15 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கீழ்பவானி வாய்க்காலின் உபரி நீரை தேக்கி வைக்கும் வகையில் கான்கிரீட் மூலம் கட்டப்பட்ட இந்த தடுப்பணை தொடர்மழை காரணமாக தற்போது நிரம்பி வழிகிறது. மேலும் உபரிநீர் வெளியேறுகிறது.
மகிழ்ச்சி
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தடுப்பணை கட்டப்பட்டு 3 மாதங்கள் கூட நிறைவு ஆகவில்லை. அதற்குள் தற்போது பெய்த மழையின் காரணமாக தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வெளியேறுவது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த தடுப்பணை மூலம் அருகில் உள்ள கிணறுகளில் வறட்சி காலங்களில் கூட தண்ணீர் குறையாமல் இருக்கும்' என்றார்கள். இந்தநிலையில் நிரம்பிய தடுப்பணையை சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் அ.பரமேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Next Story