இளம்பிள்ளை அருகே மின்னல் தாக்கி மாடு செத்தது
இளம்பிள்ளை அருகே மின்னல் தாக்கி மாடு செத்தது.
இளம்பிள்ளை:
இளம்பிள்ளை அருகே உள்ள பரமகவுண்டனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தன். விவசாயியான இவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார். அந்த மாடு சினையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு அருகே உள்ள ஆலமரத்தின் அடியில் மாட்டை கட்டி வைத்திருந்தார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் மாடு இறந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த மாட்டை பரிசோதனைக்காக அங்கிருந்து எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story