பரமத்திவேலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3½ லட்சம் தப்பியது


பரமத்திவேலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3½ லட்சம் தப்பியது
x
தினத்தந்தி 12 July 2021 12:58 AM IST (Updated: 12 July 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3½ லட்சம் தப்பியது

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. லாக்கரை உடைக்க முடியாததால்  ரூ.3½ லட்சம் தப்பியது.
டாஸ்மாக் கடை
நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூர் அருகே கீரம்பூர் சுங்கச்சாவடி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நாமக்கல் காந்தி நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 48) மேற்பார்வையாளராகவும், தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் (46) விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்செல்வன் திருச்சிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சண்முகம் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 
இதனிடையே நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் விற்பனையாளர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற அவர் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 
மது குடித்தனர்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அருகே மற்றொரு மேஜையில் இருந்த ரூ.1,000-ஐ மட்டும் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்த மதுபாட்டில்கள் எதுவும் கொள்ளை போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 
ஆனால் டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த 5 மதுபாட்டில்களை மட்டும் எடுத்து கடையிலேயே அமர்ந்து சாவகாசமாக குடித்து விட்டு பாட்டில்களை கடைக்கு உள்ளேயே போட்டு விட்டு சென்றது ெதரியவந்துள்ளது. எனினும் கடையின் லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ‌தப்பியது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story