வள்ளியூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை இந்து முன்னணியினர் திடீர் முற்றுகை


வள்ளியூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை இந்து முன்னணியினர் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 23 Jun 2021 1:28 AM IST (Updated: 23 Jun 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை இந்து முன்னணியினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்ைத இந்து முன்னணியினர் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மாநில பொது செயலாளர் அரசுராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், செயலாளர் குற்றாலநாதன், கோட்ட தலைவர் தங்கமனோகர், வக்கீல் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் பரமசிவன், பா.ஜனதா மாவட்ட தலைவர் குமார முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் குமார், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் அவர்கள் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் கிறிஸ்தவ ஆலய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆலய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிக்கிறோம். உரிய அனுமதி பெறாமல் பணிகள் நடப்பதை கண்டுகொள்ளாத வள்ளியூர் நகர பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டிக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து இந்து முன்னணியினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வள்ளியூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story