சின்னசேலத்தில் திறந்தவெளியில் செயல்படும் போலீஸ் நிலையம்


சின்னசேலத்தில்  திறந்தவெளியில் செயல்படும் போலீஸ் நிலையம்
x
தினத்தந்தி 8 May 2021 10:08 PM IST (Updated: 8 May 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் திறந்தவெளியில் செயல்படும் போலீஸ் நிலையம்

சின்னசேலம்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சின்னசேலம் போலீஸ் நிலையத்திலும் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலையத்தை தற்காலிகமாக வளாகத்தில் உள்ள திறந்த வெளிபகுதிக்கு மாற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மனுகொடுக்க வரும் பொதுமக்களிடம் இங்கேயே வைத்து போலீசார் விசாரணை நடத்துவதோடு, கொரோனா நோய் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


Next Story