டாஸ்மாக் மது விற்பனை கடும் வீழ்ச்சி


டாஸ்மாக் மது விற்பனை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 7 May 2021 9:40 PM IST (Updated: 7 May 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் மது விற்பனை கடும் வீழ்ச்சி

கோவை

விற்பனை நேரம் குறைந்ததால் டாஸ்மாக் மது விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்தது. ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையாகியது.

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மளிகைக்கடை, டீக்கடைகள் ஆகியவற்றை பகல் 12 மணிக்கு மூட வேண்டும். டாஸ்மாக் மதுக்கடை களை காலை 8 மணிக்கு திறந்து பகல் 12 மணி மூட வேண்டும் என்று விற்பனை நேரத்தை குறைத்து உத்தரவிடப்பட்டது.

கோவை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாகும். 

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் அடங்கிய கோவை மண்டலத்தில் ஒரு நாளைக்கு ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். 

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் சனிக்கிழமைகளில் டாஸ்மாக்கடைகளில் கூட்டம் அலைமோதும்.

ரூ.5 கோடிக்கு விற்பனை

தற்போது பகல் 12 மணி வரை என 4 மணி நேரம் மட்டுமே மது விற்பனை நடைபெறுகிறது. விற்பனை நேரம் குறைந்ததால் மதுபானங்க ளின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அமலான முதல்நாளில் கோவையில் ரூ.5 கோடிக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது

கோவை மாவட்டத்தில் மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அரசின் உத்தரவுப்படி தற்போது காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்று (நேற்று முன் தினம்) கோவை வடக்கில் ரூ.2 கோடியே 83 லட்சம், தெற்கில் ரூ.2 கோடியே 17 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்தன. அப்போது, கோவை மாவட்டத்தில் ரூ.20 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை இருந்தது.

 
ஆனால் தற்போது விற்பனை நேரம் குறைக்கப்பட்டதால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களையும் சேர்த்து ரூ.13 கோடிக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story