காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் 3 பேர் போக்சோவில் கைது


காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் 3 பேர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 7 May 2021 7:02 AM IST (Updated: 7 May 2021 7:02 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் 3 பேர் போக்சோவில் கைது

காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த எலுமிச்சனஅள்ளியை சேர்ந்த 16 வயது சிறுமி காவேரி பட்டணம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இந்தநிலையில் சிறுமி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த மாணவர் திவாகர் (வயது 17) என்பவர் கடத்தி சென்றதாக காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமி மற்றும் திவாகரை மீட்டனர். பின்னர் மாணவியை காப்பகத்திற்கும், திவாகரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலத்தில் உள்ள சீர்திருத்தப்பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர். 
மேலும் இந்த வழக்கில் சிறுமி கடத்தலுக்கு உதவி செய்ததாக பாலக்கோடு கம்மாளப்பட்டியை சேர்ந்த மாணவரின் அக்கா வனிதா (26) மற்றும் அவரது கணவர் சரவணன் (34) ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
====

Next Story