சுற்றுலா பயணிகள் குளிக்க தடை கொடிவேரி அணை வெறிச்சோடியது
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் கொடிவேரி அணை வெறிச்சோடி காணப்படுகிறது.
கடத்தூர்
கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் இங்கு குளிப்பதற்காக ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், திருப்பூர், நாமக்கல், சேலம், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், இங்கு ஆர்ப்பரித்து கொட்டும் அருவி தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து உண்பர். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வருவது உண்டு. இந்த நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் கொடிவேரி அணை வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story