புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 15 April 2021 4:17 PM IST (Updated: 15 April 2021 4:17 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி புதுவை கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

தமிழ் புத்தாண்டு
புதுவையில் தமிழ் புத்தாண்டு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு தங்க கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலின் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவலையொட்டி பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்படவில்லை.

பஞ்சனாதீஸ்வரர் கோவில்
திருபுவனை அருகே திருவண்டார்கோவிலில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பஞ்சனாதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதைத்தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் புதுவையில் புகழ்பெற்ற கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர் கோவில், பிள்ளைசாவடி சாய்பாபா கோவில், ரெயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவில் உள்ளிட்ட புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடை பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story