லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் திருவிழா அரசு கட்டுப்பாடுகளுடன் அம்மன் வீதி உலா


லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் திருவிழா அரசு கட்டுப்பாடுகளுடன் அம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 14 April 2021 3:08 AM IST (Updated: 14 April 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அரசு கட்டுப்பாடுகளுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.


லால்குடி, ஏப்.14-
லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.நேற்று கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகள் விதித்தது.
அதன்பேரில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு தேர்த்திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் திருப்பணியாளர்கள் கொண்டு கோவில் உள் பிரகாரத்தில் சுற்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை அடுத்து இன்று விடையாற்றி விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அன்பில் மாரியம்மன் கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வந்தனர்.

Next Story