கோதையம்மன் குளக்கரையில் மீன் விற்பனை


கோதையம்மன்  குளக்கரையில் மீன் விற்பனை
x
தினத்தந்தி 11 April 2021 9:10 PM IST (Updated: 11 April 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

கோதையம்மன் குளக்கரையில் மீன் விற்பனை

போடிப்பட்டி
ஞாயிற்றுக்கிழமை் என்றாலே அசைவப்பிரியர்களுக்கு குஷியான நாளாகவே உள்ளது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன், சிக்கன், மீன் கடைகளில் கூட்டம் அலைமோதும். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்களின் பல இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் வளர்த்துக்கொள்ளும் வகையில் நல்ல சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வமும் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது.இதனால் அசைவப்பிரியர்கள் மீன் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிலும் நீண்ட தொலைவிலிருந்து கொண்டு வரப்படும் பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளை விட நமது ஊர் மீனவர்கள் நமது நீர் நிலைகளில் பிடித்து விற்பனை செய்யும் மீன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அந்த வகையில் கொழுமம் குளத்துப்பாளையம் கோதையம்மன் குளத்தில் பரிசலில் சென்று வலை விரித்து மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் குளத்தின் கரையிலேயே விற்பனை செய்கின்றனர். இங்கு கட்லா, ஜிலேபி, பாறை உள்ளிட்ட மீன் வகைகள் ஒரு கிலோ ரூ.160 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து மீன்களை வாங்கிச்செல்கின்றனர். இதுதவிர சில்லறை வியாபாரிகளும் இங்கு வந்து மீன்களை வாங்கி, ஊருக்குள் கொண்டு போய் விற்பனை செய்கின்றனர். இதனால் கோதையம்மன் குளக்கரையில் மீன் விற்பனை ஜோராக நடைபெறுகிறது. 

Next Story