திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
திருவண்ணாமலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது.
கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து முகக்கவசவம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் திருவண்ணாமலையில் இருச்சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதை தவிர்த்தப்படி செல்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவியது முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
இதனையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ஓரளவு பக்தர்கள் வருகை தந்தனர். இருந்தபோதிலும் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.
பக்தர்கள் கூட்டம் குறைந்தது
இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாக மிகவும் குறைந்து காணப்படுகிறது.
மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் நடமாடும் பகுதிகளில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story