நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 April 2021 5:23 AM IST (Updated: 7 April 2021 5:24 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தை சேர்ந்த 7 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,244 ஆக குறைந்தது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,286 ஆக உயர்ந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,956 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் இறந்து விட்ட நிலையில், 219 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story