அரியலூர் கலெக்டர் மீது, ம.தி.மு.க. வேட்பாளர் புகார்
அரியலூர் கலெக்டர் மீது, ம.தி.மு.க. வேட்பாளர் புகார் கூறி மனு அனுப்பியுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பா, இந்திய தலைமை ேதர்தல் ஆணையருக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை ராஜேந்திரனுக்கு ஆதரவாக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. வேட்பாளரின் உறவினர்கள் மற்றும் கட்சியினர் செய்யும், தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிரான செயல்களை கண்டுகொள்வதில்லை. அதனால் தேர்தல் ஆணையம் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story