காங்கேயம் அருகே விவசாயிகளுக்கு உயிர்உர விதை நேர்த்தி குறித்து விளக்கம்


காங்கேயம் அருகே விவசாயிகளுக்கு உயிர்உர விதை நேர்த்தி குறித்து விளக்கம்
x
தினத்தந்தி 3 April 2021 2:41 AM IST (Updated: 3 April 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே விவசாயிகளுக்கு உயிர்உர விதை நேர்த்தி குறித்து விளக்கம்

காங்கேயம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் வேளாண் மாணவர்கள் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த பயனுள்ள தகவல்களை செயல்முறை விளக்கத்துடன் விரிவாக விளக்கி கூறி வருகின்றனர். இதன்படி தற்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
 அந்த வகையில் காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே மருதுறை பகுதியில் விவசாயிகளை நேரில் சந்தித்து உயிர் உர விதை நேர்த்தி குறித்து விளக்கமளித்தனர். மேலும் 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை 500 மி.லி தண்ணீருடன் கலந்து விதைகளை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் நல்ல பயனை பெறலாம் என்று விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கத்துடன் எடுத்து கூறினர். 

Next Story