திருச்செந்தூர் அருகே பாதிரியார் தற்கொலை
தினத்தந்தி 1 April 2021 11:55 PM IST (Updated: 1 April 2021 11:55 PM IST)
Text Sizeதிருச்செந்தூர் அருகே பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த ஆஸ்வால்ட் மகன் மரிய அஜித் (வயது 24). இவர் திருச்சியில் உள்ள ஒரு இறையியல் கல்லூரியில் படித்துள்ளார். தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் கடந்த 8 மாதமாக பயிற்சி பாதிரியாக பணியாற்றி வந்தார். இவர் தங்கியிருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிரியார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire