4 அடி நீள மண்ணுளி பாம்பு பிடிப்பட்டது


4 அடி நீள மண்ணுளி பாம்பு பிடிப்பட்டது
x
தினத்தந்தி 6 March 2021 9:01 PM IST (Updated: 6 March 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்ேபட்டை ரெயில் நிலையத்தில் 4 அடி நீள மண்ணுளி பாம்பு பிடிப்பட்டது

ஜோலார்பேட்டை

ஜோலார்ேபட்டை ரெயில் நிலையத்தில் 4 அடி நீள மண்ணுளி பாம்பு பிடிப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 2-வது பிளாட்பாரத்தில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அதைப் பார்த்த போலீசாரும், ரெயில்ேவ பாதுகாப்புப்படை வீரா்களும் திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 


திருப்பத்தூர் வனத்துறையினர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து, மண்ணுளி பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டுக் கட்டி எடுத்துச் சென்று எலகிரிமலை காட்டுப் பகுதியில் விட்டனர். 

Next Story