ஸ்ரீவைகுண்டத்தில் போலீசார், துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு
ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. ஸ்ரீவைகுண்டம் பெரும்பத்து மெயின் ரோட்டில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு மேடைபிள்ளையார் கோவில் தெரு, வழியாக அஞ்சலாம் தெரு, திருவள்ளுவர் தெரு, ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம், வழியாக தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வளாகத்திலிருந்து பழையபாலம் வழியாக புதுக்குடி, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. இந்த கொடி அணிவகுப்பில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி ஏ.கே. லேம்கான், செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமி பிரபா, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், வசந்தகுமார், சேரகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்லி அரசன், ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துபெருமாள் உட்பட அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 90 பேரும், தமிழ்நாடு சிறப்புக் போலீஸ் படையினர், ஆயுதப்படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 120 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story