சேலத்தில் போலீஸ் என கூறி வியாபாரியிடம் 9 பவுன் நகை அபேஸ்


சேலத்தில் போலீஸ் என கூறி வியாபாரியிடம் 9 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 18 Feb 2021 4:54 AM IST (Updated: 18 Feb 2021 4:57 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போலீஸ் என கூறி வியாபாரியிடம் 9 பவுன் நகை அபேஸ்.

சேலம்,

சேலம் கடைவீதி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று முன்தினம் நகை வியாபாரி ஒருவர் பையில் நகைகளை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அந்த வியாபாரியை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் போதை பிரிவு போலீசார் என்றும், உங்களுடைய பையை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினர். இதை நம்பி வியாபாரியும் நகை வைத்திருந்த பையை கொடுத்தார். அப்போது மர்ம நபர்கள் பையில் கண்ணாடி பாக்சில் இருந்த 9 பவுன் நகையை அவருக்கு தெரியாமல் அபேஸ் செய்துவிட்டு அதற்கு பதிலாக 3 பொட்டலங்களை உள்ளே வைத்தனர். பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது தூரம் சென்றபின் பையை அந்த வியாபாரி திறந்து பார்த்தார். அப்போது பையில் இருந்த 9 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டதும், அதற்கு பதிலாக பொட்டலங்களில் கல் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நகை வியாபாரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story