ராதாபுரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


ராதாபுரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 Feb 2021 1:52 AM IST (Updated: 18 Feb 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராதாபுரம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகள் ரெஜிலா தேவி (வயது 24). இவருக்கும் பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெஜிலா தேவி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அவர் தனது கணவருக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ரெஜிலா தேவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story