இன்று காதலர் தினம்: ஈரோட்டில் விற்பனைக்கு குவிந்த ரோஜா பூக்கள்


இன்று காதலர் தினம்: ஈரோட்டில் விற்பனைக்கு குவிந்த ரோஜா பூக்கள்
x
தினத்தந்தி 14 Feb 2021 3:02 AM IST (Updated: 14 Feb 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

இன்று காதலா் தினம் என்பதால் ஈரோட்டில் விற்பனைக்கு ரோஜா பூக்கள் குவிந்தன.

ஈரோடு
காதலர் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தங்களது காதலர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுப்பது வழக்கம். அதிலும் காதலர்கள் தங்களது காதலிக்கு ரோஜா பூக்களை விரும்பி வாங்கி கொடுப்பார்கள். தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் தங்களது காதலை வெளிப்படுத்த பல்வேறு வழிகள் இருந்தாலும், ரோஜா பூவை கொடுத்து அன்பை பகிர்ந்து கொள்வதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே காதலர் தினத்தையொட்டி ஈரோட்டில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து பூக்கடைக்காரர் ஒருவர் கூறுகையில், “பெங்களூருவில் இருந்து ஈரோட்டுக்கு ரோஜா பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் ஒரு பூ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பல்வேறு நிறங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு உள்ளன”, என்றார்.

Next Story